Ad Code

Responsive Advertisement

‘வாடிவாசல்’ அறிவிப்புக்காக காத்திருந்த தமிழ் நெஞ்சங்களுக்கு நாளை நல்விருந்து: தாணு

சூர்யா - வெற்றிமாறனின் ’வாடிவாசல்’ படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் தயாரிப்பாளர் தாணு.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது ’சூர்யா 40’ படத்தில் நடித்து வருகிறார். வெற்றிமாறனும் நகைச்சுவை நடிகர் சூரியை ஹீரோவாக அறிமுகப்படுத்தி படம் இயக்கி வருகிறார். இருவரும் தங்கள் படங்களை முடித்தப்பிறகு ‘வாடிவாசல்’ படத்தில் இணையவிருக்கிறார்கள். சூர்யாவின் பிறந்தநாள் அன்று ‘வாடிவாசல்’ படத்தின் போஸ்டரை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்தார் வெற்றிமாறன்.

தாணு தயாரிக்கும் ஜல்லிக்கட்டு கதைக்களத்தைக் கொண்ட இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். சூர்யா ரசிகர்கள் பலரும் வாடிவாசல் அப்டேட் எப்போது கிடைக்கும் என்று எதிர்பார்த்து வந்த நிலையில், நாளை இப்படத்தின் டைட்டில் லுக் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார் தயாரிப்பாளர் தாணு. அவரது ட்விட்டர் பக்கத்தில், “வாடிவாசல் பற்றிய அறிவிப்பிற்காக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த தமிழ் நெஞ்சங்களுக்கு நல்விருந்தாய், வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக்கை நாளை மாலை 5:30-க்கு வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2Ucldgl

Post a Comment

0 Comments