
கார்த்தி நடிக்கும் 'சர்தார்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது.
இரும்புத்திரை, ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வருகிறார். 'சர்தார்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள அந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 26ஆம் தேதி தொடங்கியது. சுமார் 10 நாட்கள் நடைபெற்ற அந்த படப்பிடிப்பு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பாதிக்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு மேல் நிறுத்தி வைக்கப்பட்ட சர்தார் படத்தின் படப்பிடிப்பை சென்னையில் இன்று மீண்டும் தொடங்கியுள்ளனர்.
நான்கு நாட்கள் நடைபெறும் இந்தப் படப்பிடிப்பில், படத்தில் இடம்பெறும் முக்கிய சண்டைக் காட்சியை படமாக்குகின்றனர். அது ஆபத்து மிகுந்த சண்டைக் காட்சி என்பதால், ஏற்கனவே பயிற்சி (Rehearsal) எடுத்துக்கொண்டு அந்த காட்சியை படமாக்குகின்றனர்.
சர்தார் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை முடித்தபின் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார் கார்த்தி. அந்தப் படத்தை முடித்த பிறகு மீண்டும் 'சர்தார்' திரைப் படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3Bd8eMe



0 Comments