
ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள தமிழக வீரர்களுடன் ஆன்லைன் மூலம் உரையாடி நம்பிக்கையூட்டியுள்ளார் கமல்ஹாசன்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதிவரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில், தமிழகத்திலிருந்து 13 பேர் கலந்துகொள்ளத் தேர்வாகியுள்ளனர். அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஒவ்வொருவருக்கும் தமிழக அரசு ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை அளித்ததோடு, தங்கம் வெல்வோருக்கு ரூ.3 கோடியும், வெள்ளி வெல்வோருக்கு ரூ.2 கோடியும், வெண்கலம் வெல்வோருக்கு ரூ.1 கோடி ரூபாயும் பரிசுத்தொகை அறிவித்திருக்கிறது.
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டுள்ள நம் தமிழக வீரர்களுடன் ஆன்லைன் மூலம் கலந்துரையாடி நம்பிக்கையூட்டினார். அவரது, ட்விட்டர் பக்கத்தில், புகைப்படங்களைப் பகிர்ந்து “டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தமிழகத்திலிருந்து தேர்வான வீரர்களுடன் கலந்துரையாடினேன். தமிழ் வீரமே வாகையே சூடும். நாளை உலகமே இவர்கள் புகழ் பாடும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3ig1zIa



0 Comments