Ad Code

Responsive Advertisement

‘சார்பட்டா’வில் நெருக்கடி நிலையை திமுக எதிர்கொண்டதை காட்டியிருப்பது சிறப்பு: உதயநிதி

நடிகர் உதயநிதி ஸ்டாலின் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் மொத்த படக்குழுனரையும் பாராட்டியுள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த ‘சார்பட்டா பரம்பரை’ அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. படத்தில், சார்பட்டா பரம்பரை பாக்ஸிங் குழுவினர் திமுகவினராகவும் நெருக்கடி நிலைக்குறித்தும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், படத்தைப் பார்த்த உதயநிதி ஸ்டாலின், ”70-களின் பின்னணியில் குத்துச்சண்டை விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்துள்ள ’சார்பட்டா பரம்பரை' முக்கியமான திரைப்படம். அந்த காலத்தில் இருந்த அரசியல் நெருக்கடி நிலையையும், அதை கழகம் - கலைஞர் - கழக தலைவர் எதிர்கொண்ட விதத்தையும் கதையோடு காட்சிப்படுத்தியிருப்பது சிறப்புக்குரியது.

image


கபிலனாக அசத்தியுள்ள நண்பர் ஆர்யாவுக்கும், கழகத்துக்கார்-ரங்கன் வாத்தியாராக நடித்த பசுபதி சாருக்கும் சார், டான்ஸிங் ரோஸ் ஷபீருக்கும், வேம்புலியாக நடித்த ஜான் கொக்கன், ஜான் விஜய் என ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் கதையில் வாழ செய்துள்ள நண்பர் இயக்குநர் பா.ரஞ்சித்துக்கும் ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3iFuu8V

Post a Comment

0 Comments