Ad Code

Responsive Advertisement

’எதற்கும் துணிந்தவன்’ படப்பிடிப்பில் மனைவியுடன் பிறந்தநாளைக் கொண்டாடிய சூர்யா

‘எதற்கும் துணிந்தவன்’ படப்பிடிப்பில் தனது பிறந்தநாளைக் கொண்டாடிய சூர்யாவின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் சூர்யா நேற்று தனது 46 வது பிறந்தநாளைக் கொண்டாடினார். ’சூரரைப் போற்று’ பட வெற்றிக்குப் பிறகு சூர்யா, இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் ’எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகனும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ், ராஜ்கிரண் உட்பட பல நடிகர்கள் நடிக்கின்றனர்.

image

நேற்று சூர்யா பிறந்தநாளையொட்டி படப்பிடிப்பில் இயக்குநர் பாண்டிராஜ், நடிகர்கள் பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட மொத்த படக்குழுவினரும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். சூர்யாவின் மனைவி ஜோதிகாவும் சூர்யாவுன் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/36X4QXN

Post a Comment

0 Comments