
தனது அம்மாவின் பிறந்தநாளை உற்சாகமுடன் கேக் வெட்டி கொண்டாடி ’என் அம்மா, அப்பா கஷ்டங்களை மட்டுமே பார்த்தவர்கள்’ என்று கூறியிருக்கிறார், ’குக் வித் கோமாளி’ புகழ்.
விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ மூலம் கவனம் ஈர்த்த புகழ் தற்போது, சந்தானத்தின் ‘சபாபதி’, அஜித்தின் ‘வலிமை’, சிவகார்த்திகேயனின் ‘டான்’, அஸ்வினின் ‘என்ன சொல்ல போகிறாய்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். வறுமையான குடும்பப் பின்னணியிலிருந்துதான் புகழ், இந்த உயரத்தை எட்டியிருக்கிறார்.

இந்நிலையில், புகழ் அவரது அம்மாவின் பிறந்தநாளையொட்டி தனது இன்ஸ்டாகிராமில் ”என் அப்பா, அம்மா முகத்துல சிரிப்பை பார்க்க குடுத்து வச்சிருக்கணும். கஷ்டங்களை மட்டும் பார்த்தவர்கள்” என்று உருக்கமுடன் கூறியிருக்கிறார். அவரது, அம்மா கையால் உணவு உண்ணும் வீடியோவை இதுவரை 1 கோடி பார்வையாளர்களும், அம்மா பிறந்தநாள் புகைப்படத்திற்கு 5 லட்சம் பேரும் லைக்ஸ்களைக் குவித்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3z00VWe



0 Comments