Ad Code

Responsive Advertisement

வெற்றிமாறன் - லாரன்ஸ் படத்தில் இணைந்த இசையமைப்பாளர் தமன்

வெற்றிமாறன் கதை, தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தின் இசையமைப்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

தமிழின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குநரான ராகவா லாரன்ஸ் தற்போது, தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கிவரும் ’ருத்ரன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இது மலையாளத்தில் வெற்றிபெற்ற ’ஐயப்பனும் கோஷியும்’ படத்தின் ரீமேக் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில், அடுத்ததாக வெற்றிமாறான் தயாரித்து, கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள ‘அதிகாரம்’ படத்தில் லாரன்ஸ் நடிக்கிறார். இப்படத்தின், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில், இசையமைப்பாளராக முன்னணி இசையமைப்பாளர் தமன் இணைந்திருக்கிறார்.

image

தமிழில் ‘மாஸ்கோவின் காவிரி’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான தமன், ’காஞ்சனா’,’காஞ்சனா 2’ ‘மெளனகுரு’, ’ஒஸ்தி’,’தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ ‘ஈஸ்வரன்’ உள்ளிட்டப் படங்களுக்கு இசையமைத்துள்ளவர். தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராகவும் இருக்கிறார். இந்தியா முழுக்க சமீபத்தில் வைரல் ஹிட் அடித்த ’புட்டபொம்மா’ பாடல் இவரது இசையில் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3hFQy3R

Post a Comment

0 Comments