Ad Code

Responsive Advertisement

சமந்தா படத்தில் அறிமுகமாகும் அல்லு அர்ஜுன் மகள்

நடிகர் அல்லு அர்ஜுன் மகள் அல்லு அர்ஹா குழந்தை நட்சத்திரமாக சமந்தா நடிக்கும் படத்தில் அறிமுகமாகிறார்.

நடிகை சமந்தா விக்னேஷ் சிவனின் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, தெலுங்கில் ‘சகுந்தலம்’ படத்திலும் நடித்து வருகிறார். ‘ருத்ரமாதேவி’ படத்தை இயக்கிய தெலுங்கின் பிரபல இயக்குநர் குணசேகர் மகாபாரத கதையை அடிப்படையாகக் கொண்டு ‘சகுந்தலம்’ படத்தை இயக்கி வருகிறார். இதில், நாயகியாக சமந்தா நடிக்கிறார்.

image

இந்த நிலையில், தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுனின் மகள் அல்லு அர்ஹா குழந்தை நட்சத்திரமாக, இப்படத்தில் அறிமுகமாகிறார். முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் அல்லு அர்ஹா 10 நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார்.

image

அல்லு அர்ஜுனின் தம்பி அல்லு சிரிஷ்ஷும் நடிகர்தான். தமிழில் ‘கெளரவம்’ படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3ekJDLy

Post a Comment

0 Comments