Ad Code

Responsive Advertisement

சூர்யா பிறந்தநாளில் வெளியாகும் ’சூர்யா 40’ ஃபர்ஸ்ட் லுக்?

சூர்யா பிறந்தநாள் அன்று ’சூர்யா 40’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

’சூரரைப் போற்று’ பட வெற்றிக்குப் பிறகு நடிகர் சூர்யா இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் ’சூர்யா 40’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ், ராஜ்கிரண் உட்பட பல நடிகர்கள் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்திற்கான சூர்யாவின் புகைப்படங்கள் வெளியாகி கவனம் ஈர்த்தன.

image

கொரோனா ஊரடங்கிற்கு முன்பு 35 சதவீத படப்பிடிப்பை முடித்த ‘சூர்யா 40’ படக்குழுவினர் தற்போது சினிமா படப்பிடிப்பு நடத்த அனுமதித்துள்ளதால் மீண்டும் வேகமாக படப்பிடிப்பைத் துவங்கவுள்ளனர்.

இந்த நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23-ஆம் தேதி ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2UUtF3X

Post a Comment

0 Comments