
இயக்குநர் பாரதிராஜாவின் பிறந்த நாளுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
’இயக்குநர் இமயம்’ என்று கொண்டாடப்படும் பாரதிராஜா இன்று தனது 78 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதனையொட்டி பலரும் வாழ்த்து தெரிவித்துவரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ் மண்ணின் ஈடு இணையற்றப் பெருமை நீங்கள். என்னுயிர் அப்பா இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு மனம் நெகிழ்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
என்னுயிர் அப்பா இயக்குநர் இமயம் @offBharathiraja அவர்களுக்கு மனம் நெகிழ்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
— சீமான் (@SeemanOfficial) July 17, 2021
எளியவர்கள் எங்களோடு நின்று தமிழ் மண்ணிற்கான அரசியலை வாழ்த்தி, வலிமைப்படுத்தியவர் நீங்கள்..
அன்னைத் தமிழ் போல் எல்லா வளங்களோடும் நலங்களோடும் பல்லாண்டு நீங்கள் வாழ வேண்டும் அப்பா! pic.twitter.com/Tw8O637hPX
எளியவர்கள் எங்களோடு நின்று தமிழ் மண்ணிற்கான அரசியலை வாழ்த்தி, வலிமைப்படுத்தியவர் நீங்கள். அன்னைத் தமிழ் போல் எல்லா வளங்களோடும் நலங்களோடும் பல்லாண்டு நீங்கள் வாழ வேண்டும் அப்பா” என்று பிறந்தநாள் வாழ்த்துகள் கூறியிருக்கிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3ihKy0t



0 Comments