Ad Code

Responsive Advertisement

"பள்ளி மாணவர்கள் மீண்டும் சந்திப்பதைப்போல உணர்வு” -'விக்ரம்’ படப்பிடிப்பு பற்றி கமல்ஹாசன்

50 ஆண்டுகால திரைவாழ்வில் இந்த அளவுக்கு படப்பிடிப்பில் இருந்து விலகி இருந்ததில்லை என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

’மாஸ்டர்’ வெற்றிக்குப்பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தை இயக்குகிறார். கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் விக்ரம் படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது. ஆனால், அதற்கு பிறகு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் கட்சி தயாரானதால், அந்தப் படத்தின் படப்பிடிப்பு தாமதமானது.

இந்த நிலையில், நேற்று பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது. இதுகுறித்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ள கமல்ஹாசன், “பள்ளி மாணவர்கள் மீண்டும் சந்திப்பதைப்போல உணர்கிறேன். 50 ஆண்டுகால திரைவாழ்வில் இந்த அளவுக்கு படப்பிடிப்பில் இருந்து விலகி இருந்ததில்லை. எனது சக தோழர்கள் அனைவரையும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனலில் பணிபுரிய வரவேற்கிறேன்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3zcDyc7

Post a Comment

0 Comments