Ad Code

Responsive Advertisement

ரிலீஸ்க்கு தயாரான ஆர்யாவின் 'அரண்மனை 3'

ஆர்யா நடித்துள்ள அரண்மனை 3 திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

சுந்தர். சி இயக்கத்தில் வெளியான அரண்மனை, அரண்மனை 2 ஆகிய திரைப்படங்கள் வசூல் ரீதியில் பெரும் வெற்றி அடைந்தன.  நகைச்சுவை வகையில் எடுக்கப்பட்ட அந்தப் படங்களின் மூன்றாவது பாகத்தை இயக்குனர் சுந்தர். சி தற்போது இயக்கியுள்ளார்.  இதில் ஆர்யா, ராஷி கண்ணா, மறைந்த நடிகர் விவேக் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கான படப்பிடிப்பு சென்னை, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று முடிந்தன. குறிப்பாக இந்த படத்தில் இடம்பெறும் இறுதி சண்டைக் காட்சி, ஒரு  கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் செட் அமைத்து படமாக்கப்பட்டது.  மேலும் இதற்கான கிராபிக்ஸ் காட்சிகளை கடந்த ஆறு மாதங்களாக படக்குழுவினர் உருவாக்கி வந்தனர்.

image

இந்த நிலையில் படத்திற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்து அரண்மனை-3 திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.  முந்தைய பாகங்களை விட அதிக நகைச்சுவை இடம்பெற்றுள்ளதாகவும், இந்த படம் ரசிகர்களிடம் இன்னும் பெரிய வரவேற்பை பெறும் என்றும் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.  அதேபோல் படத்தின் வேலைகள் அனைத்தும் நிறைவடைந்ததால் வெளியீட்டிற்கான பணிகள் நடைபெற்று வருகிறது எனவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3wXr0nt

Post a Comment

0 Comments