
வருகிற 22ஆம் தேதி நடிகர் விஜய்-ன் பிறந்த நாள் வர இருக்கிறது. இதையடுத்து நடிகர் விஜய்-ன் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகர் விஜய் தனது படங்களில் அரசியல் கலந்த அதிரடி வசனங்களை பேசிவரும் நிலையில், அவரது அரசியல் பிரவேசத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். இந்நிலையில், வருகிற 22ஆம் தேதி நடிகர் விஜய் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் அரசியல் நெடி வீசும் வாசகங்களோடு போஸ்டரை திண்டுக்கல் நகர் முழுவதும் ஒட்டியுள்ளனர்.
அதில், முதலமைச்சர் ஸ்டாலின், நடிகர் விஜய் ஆகியோர் செங்கோலுடன் நிற்பது போலவும், ஏழை எளிய மக்களுக்கான நல்லாட்சியை வழங்கிட தம்பி வா தலைமையேற்க வா என்ற அரசியல் அனல்பறக்கும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள இந்த போஸ்டரால் திண்டுக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3gFMT4q



0 Comments