
”நான் வியக்கும் இருக்குநர்களில் ஒருவரான சேகர் கம்முலாவுடன் பணியாற்றவிருப்பது மிகுந்த உற்சாகமாக இருக்கிறது” என்று நடிகர் தனுஷ் உற்சாகமுடன் ட்வீட் செய்துள்ளார்.
தெலுங்கின் முன்னணி இயக்குநரும் தேசிய விருது பெற்ற இயக்குநருமான சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கிறார் என்று நேற்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. கடந்த 1999-ஆம் ஆண்டு வெளியான ‘டாலர் ட்ரீம்ஸ்’ படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதை பெற்ற சேகர் கம்முலா, இதுவரை 5 முறை சிறந்த இயக்குநருக்கான ஃபிலிம் ஃபேர் விருதுகளையும் 4 முறை நந்தி விருதுகளையும் குவித்துள்ளார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு சூப்பர் ஹிட் அடித்த ‘ஹேப்பி டேஸ்’ படத்தையும் இவர்தான் இயக்கியிருக்கிறார். இப்படம் பிரகாஷ் ராஜ் தயாரிப்பில் தமிழில் ‘இனிது இனிது’ என்று ரீமேக் ஆனது குறிப்பிடத்தக்கது. சேகர் கம்முலாவின் அனைத்து படங்களும் கவனம் ஈர்த்தவை என்பதால், தனுஷ் – கம்முலா கூட்டணிக்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தனுஷ், “ நான் வியக்கும் இயக்கநர்களில் ஒருவரான சேகர் கம்முலாவுடன் பணியாற்றவிருப்பது மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2S9cPgw



0 Comments