Ad Code

Responsive Advertisement

”அமெரிக்கா சென்றுள்ள ரஜினிகாந்த் நலம்பெற்று இளமையுற்று நாடு திரும்பவேண்டும்”: வைரமுத்து

”உடல் பரிசோதனைகளுக்காக அமெரிக்கா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த்தை போனில் அழைத்து நலம்பெற்று இளமையுற்று நாடு திரும்பவேண்டும்” என்று  கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

”கொரோனா தடுப்பு ஊசி செலுத்திக் கொண்ட ரஜினிகாந்த் அரசின் சிறப்பு அனுமதி பெற்று உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். மருத்துவ பரிசோதனை முடிந்து மூன்று வார காலம் அமெரிக்காவில் தங்கிய பின்பு சென்னை திரும்பவிருக்கிறார். இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், ”மருத்துவச் சோதனைக்கு அமெரிக்கா செல்லும் ரஜினி நலம் பெற்று இளமையுற்று நாடு திரும்ப வேண்டுமென்று தொலைபேசியில் அழைத்து வாழ்த்தினேன். 'மனம் விட்டு உரையாடவும் உறவாடவும் நாம் சிலர்தானே இருக்கிறோம்' என்பது ரஜினி என்னிடம் அடிக்கடி சொல்வது. அந்தச் சிலருள் ஒருவர் சிறப்போடு வாழ்க” என்று பதிவிட்டு வாழ்த்தியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3iS0U1z

Post a Comment

0 Comments