
மறைந்த நடிகர் விவேக் வீட்டிற்கு, நடிகர் விஜய் இன்று காலை நேரடியாகச் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த 17 ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு, கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிவரும் நிலையிலும் ஏராளமான திரைத்துறையினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். விவேக் மறைவிற்கு முன்பாகவே, நடிகர் விஜய் ‘விஜய் 65’ படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பிற்காக கடந்த 6 ஆம் தேதி இரவு ஜார்ஜியா சென்றிருந்தார். தொடர்ச்சியாக 16 நாட்கள் படப்பிடிப்பில் இருந்ததால் விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரவில்லை.

இந்நிலையில், நேற்று விஜய் படப்பிடிப்பு முடிந்து ஜார்ஜியாவிலிருந்து தமிழகம் வந்தடைந்தார். அவர் விமான நிலையத்திலிருந்து வெளியில் வரும் புகைப்படங்கள் நேற்று வெளியாகியிருந்த நிலையில், இன்று காலை நடிகர் விவேக் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதோடு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

தமிழன், குஷி, யூத், பத்ரி, பிரியமானவள், நேருக்கு நேர், திருமலை என ஏராளமான படங்களில் விஜய் - விவேக் கூட்டணி நகைச்சுவையில் கலக்கியுள்ளனர். கடைசியாக விஜய்யுடன் விவேக் ‘பிகில்’ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3vg3L7B



0 Comments