Ad Code

Responsive Advertisement

கார்த்தியின் ‘சர்தார்’ படத்தில் இணைந்த ‘கர்ணன்’ பட நடிகை

நடிகர் கார்த்தியின் ‘சர்தார்’படத்தில் ‘கர்ணன்’ பட நடிகை ரஜிஷா விஜயன் இணைந்துள்ளார் 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘கர்ணன்’ படம் வசூல் சாதனை செய்துகொண்டிருக்கிறது. தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரஜிஷா விஜயன் நடித்திருந்தார். திரெளபதி கதாபாத்திரத்தில் பார்வையாலேயே தனுஷை காதலில் விழ வைக்கும் ரஜிஷா விஜயனின் மேக்கப் இல்லாத நடிப்பும் முகத்தில் இருக்கும் அழகிய தழும்பும் கவனத்தை ஈர்த்து ரசிக்க வைத்தன. ‘கர்ணன்’மூலம் ரஜிஷா விஜயனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் அதிகரித்துள்ளனர்.

image

இதைத்தொடர்ந்து ரஜிஷா விஜயன் அடுத்து எந்தப் படத்தில் நடிக்கப்போகிறார் என்று எதிர்பார்ப்புகள் அதிகரித்த நிலையில், நடிகர் கார்த்தியின் ’சர்தார்’ படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இணைந்திருக்கிறார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்திருக்கிறார் ரஜிஷா விஜயன்.

image

இப்படத்தை, பி.எஸ் மித்ரன் இயக்குகிறார். இன்று படப்பிடிப்பு துவங்கியுள்ளது. கார்த்தி இரட்டை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. மற்றொரு ஹீரோயினாக ராஷிகண்ணா நடிக்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3xrF0Y3

Post a Comment

0 Comments