
’பிக்பாஸ்’ முகேன் ராவ் நடிக்கும் ‘வேலன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்டுள்ளார்.
’பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த முகேன் ராவ் ‘வெற்றி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இப்படம் ரிலீஸுக்கு காத்திருக்கிறது. இப்படத்தை, கடந்த 2011 ஆம் ஆண்டு நானி, நித்யாமேனன் நடிப்பில் வெளியான ‘வெப்பம்’ படத்தின் இயக்குநர் அஞ்சனா அலிகான் இயக்கி வருகிறார். இவர் கவுதம் மேனனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். இதனைத் தொடர்ந்து, சமீபத்தில் முகேன் ராவ் நடிக்கும் ‘வேலன்’ படத்தின் அறிவிப்பு வெளியானது.

கவின் இயக்கும் இப்படத்தில் பிரபு, சூரி, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். சூரி மலையாளியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்டுள்ளார். வேஷ்டி சட்டையுடன் முகேன் ராவ்வும் தாவணி பாவாடையில் ஹீரோயின் மீனாட்சியும் கவனம் ஈர்க்கிறார்கள். தமிழ் பையன், மலையாளி பொண்ணு இருவருக்கும் இடையேயான காதல் என்பதை உணர்த்துகிறது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3tWXfT4



0 Comments