
தியேட்டர் வெளியீட்டைத் தொடர்ந்து கார்த்தியின் ’சுல்தான்’படம் வரும் 30 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ஓடிடியில் வெளியாகிறது.
’கைதி’ வெற்றிக்குப்பிறகு நடிகர் கார்த்தி, பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவான ‘சுல்தான்’ படத்தில் இணைந்தார். கடந்த 2 ஆம் தேதி படம் தியேட்டரில் வெளியான நிலையில், 28 நாட்களுக்குப் பிறகு வரும் 30 ஆம் தேதி ‘சுல்தான்’ படம் தமிழில் ஓடிடி தளங்களான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் சிம்ப்ளி செளத்திலும் வெளியாகிறது.
அதேபோல, தெலுங்கிலும் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது. கொரோனா சூழலில் ரசிகர்களின் வருகை குறைந்ததால் ‘மாஸ்டர்’ படத்தை தவிர்த்து அடுத்தடுத்து வெளியான படங்கள் வசூலைக் குவிக்காத நிலையில், கார்த்தியின் ‘சுல்தான்’ வசூலைக் குவித்தது என்றார்கள் தியேட்டர் நிர்வாகிகள். கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தியேட்டர்களை மூட தமிழக அரசு மீண்டும் உத்தரவிட்டுள்ள நிலையில் சுல்தான் படம் ஓடிடியில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3nkzphz



0 Comments