Ad Code

Responsive Advertisement

”சிரிக்குறதுலாம் வியாதியானு கேப்பீங்க.. ஆனா அது எனக்கு இருக்கு” -மனம் திறந்த நடிகை அனுஷ்கா

படப்பிடிப்பின்போது நகைச்சுவை சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கும்போது மட்டும் சிரித்துக்கொண்டே இருப்பேன் என்று நடிகை அனுஷ்கா ஷெட்டி தெரிவித்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்த இவர், தெலுங்கில் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான ‘சூப்பர்’ என்றப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் தமிழ், தெலுங்கு என இரு மொழிப் படங்களிலும் கவனம் செலுத்தி வந்த நிலையில், எஸ்.எஸ். ராஜமௌலியின் ‘பாகுபலி’ முதல் மற்றும் இரண்டாம் பாகம் வாயிலாக இந்தியாவையும் தாண்டி, நடிகை அனுஷ்காவுக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது.

எனினும் இவர் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘பாகமதி’ படத்திற்கு பிறகு பெரிதாக படங்கள் எதுவும் நடிக்கவில்லை. இந்நிலையில் சமீபத்தியப் பேட்டி ஒன்றில் நடிகை அனுஷ்கா ஷெட்டி தெரிவித்துள்ளது வைரலாகி வருகிறது. அதில், “எனக்கு சிரிப்பு நோய் உள்ளது. அதாவது சிரித்துக்கொண்டே இருப்பது. சிரிப்பது ஒரு பிரச்சனையா என்று நீங்கள் நினைக்கலாம்? ஆனால் எனக்கு இந்தப் பிரச்சனை உள்ளது. நான் சிரிக்க ஆரம்பித்தால், 15 முதல் 20 நிமிடங்கள் வரை சிரித்துக் கொண்டே இருப்பேன்.

image

நகைச்சுவைக் காட்சிகளைப் பார்க்கும் போதோ அல்லது படமெடுக்கும் போதோ நான் தரையில் விழுந்து சிறிது நேரம் சிரிப்பேன். நகைச்சுவை சம்பந்தப்பட்ட காட்சிகள் படப்பிடிக்கும்போது மட்டும் எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். சில நேரங்களில் சிரிப்பை அடக்க முடியாமல், படப்பிடிப்பு தளத்தில் இடைவேளை விடும் அளவுக்கு போய்விடும். சிரிப்பை கட்டுப்படுத்தியப் பிறகே மீண்டும் வந்து நடிப்பேன்” என்று தெரிவித்துள்ளார். நடிகை அனுஷ்கா ஷெடடி, தற்போது தெலுங்கு நடிகர் நவீன் பொலிஷெட்டியின் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/BufVPEg

Post a Comment

0 Comments