Ad Code

Responsive Advertisement

அமெரிக்காவில் வசூல் மழை பொழியும் 'பொன்னியின் செல்வன்' -ரஜினி பட வசூலை முறியடித்து முதலிடம்

'பொன்னியின் செல்வன்' படம் அமெரிக்காவில் மட்டும் சுமார் 55 லட்சம் அமெரிக்க டாலர்களை வசூலித்து சாதனை படைத்துள்ளது.

கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக இயக்கி இருக்கிறார் மணிரத்னம். இப்படத்தின் முதல் பாகம் தமிழ், இந்தி உட்பட 5 மொழிகளில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வெளியானது. இதில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், சுபாஷ்கரனின் லைகா புரொட்க்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன.

image

பான் இந்தியா முறையில் உருவான இப்படத்தின் இரண்டு பாகங்களின் பட்ஜெட் ரூ.500 கோடி எனக் கூறப்படுகிறது. தற்போது இந்தப் படம் வசூலை வாரிக் குவித்து வருகிறது. முதல் வாரத்தில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.325 கோடியை வசூலித்துள்ளது. தமிழ்நாட்டில் ரூ.130 கோடியை வசூலித்துள்ளது. இதனால், இதன் அடுத்தப் பாகத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

image

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படம் அமெரிக்காவில் மட்டும் சுமார் 55 லட்சம் அமெரிக்க டாலர்களை வசூலித்து சாதனை படைத்துள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் இந்த படம் 46 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதுவரை வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களில் அதிக வசூல் செய்த படமாக பொன்னியின் செல்வன் படம் அமெரிக்காவில் அமைந்துள்ளது. இந்த படம் ரஜினியின்  2.0 படத்தின் வசூலை முறியடித்து முதலிடம் பிடித்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ஆதித்த கரிகாலன், குந்தவையாக வேடமணிந்து பொன்னியின் செல்வன் படம் பார்க்க வந்த ரசிகர்கள்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/6mB8Ied

Post a Comment

0 Comments