மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இரண்டு நாட்களில் 150 கோடி ரூபாய் வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது.
கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக்க பிரபலங்கள் பலரும் முயன்று முடியாதநிலையில், தமிழ் திரையுலகின் 60 ஆண்டுகால கனவை, இயக்குநர் மணிரத்னம் சாத்தியமாக்கியிருக்கிறார். 5 பாகங்கள் கொண்ட ‘பொன்னியின் செல்வன்’ நாவலை, அதுவும் 150 நாட்களில் படப்பிடிப்பு நடத்தி வியப்பில் ஆழ்த்தியுள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் வெளியான இந்த திரைப்படம், கோலிவுட்டில் புதிய சாதனை படைத்துள்ளது. அதன்படி, அதிவேகத்தில் அதாவது 2 நாட்களில் உலக அளவில் 150 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது.
குறிப்பாக அமெரிக்காவில் இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முதல்நாளில் தமிழ்நாட்டில் மட்டும் 25.86 கோடி ரூபாய் வசூலை ஈட்டிய இந்தப் படம், ஒட்டுமொத்தமாக 78.29 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருந்தது. இதில் வெளிநாடுகளில் மட்டும் 34.25 கோடி ரூபாய் முதல் நாள் வசூலாக இருந்தது. முன்பதிவு டிக்கெட்களிலேயே ‘பீஸ்ட்’ படத்தை அடுத்து வசூலை ஈட்டிய ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம், தற்போது ஒருவாரகாலத்திற்கு 90 சதவிகித டிக்கெட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாலும், வரும் நாட்கள் விடுமுறை தினங்கள் என்பதால் கூடுதல் வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/q8L6Tv2
0 Comments