புகழ்பெற்ற பாடகர் பம்பா பாக்யா மாரடைப்பால் காலமானார்.
தமிழ் சினிமாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சில ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார் பம்பா பாக்யா, சர்கார் படத்தில் சிம்டாங்காரன், 2.0 படத்தில் இடம்பெற்ற `புள்ளினங்காள்’ பாடல் மூலம் மிகப் பெரிய கவனம் பெற்றார். ரஹ்மான் இசையமைக்கும் படங்களில் ராவணன் படத்தில் இருந்து பாடி வரும் இவர், பிகில் படத்தில் `காலமே காலமே’, சர்வம் தாளமயம் படத்தில் `டிங் டாங்’, இரவின் நிழல் படத்தில் `பேஜாரா’, பொன்னியின் செல்வன் படத்தில் `பொன்னி நதி’ போன்ற பாடல்களைப் பாடி வரவேற்பு பொற்றார். பாகுபலி படத்தில் இவர் பாடிய வந்தாய் ஐய்யா, வந்தாய் ஐய்யா பாடல் பிரபலமானது. மேலும் சில படங்களிலும், தனி இசைப் பாடல்களிலும் பாடியுள்ளார்.
இவர் நேற்று திடீரென மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு உடல்நலம் சரி இல்லாத நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்திருக்கிறார். இவரது மறைவுக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து சினிமாவில் பாடல்களைப் பாடி வந்தவர் சமீபத்தில் கூட 'ட்ராவல்ல ஒரு காதல்' என்ற படத்தில் ஒரு பாடலை பாடியிருந்தார். இவரது மரணம் திரையுலகினரையும் ரசிகர்களையும் வருத்தத்திலும் மீளா துயரிலும் ஆழ்த்தியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/lSJDf1d
0 Comments