Ad Code

Responsive Advertisement

'டாக்டர்ஸ் என்னோட வலது காலை அகற்ற சொன்னாங்க' - நடிகர் ஜான் ஆபிரகாம் பகிர்ந்த வேதனை அனுபவம்

படப்பிடிப்பின்போது முழங்காலில் ஏற்பட்ட பலத்த காயத்தால்,  வலது காலை அகற்ற டாக்டர்கள் முடிவு செய்ததாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் நடிகர் ஜான் ஆபிரகாம்.  

பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியாகியிருந்த ஆக்ஷர் த்ரில்லர் திரைப்படம் 'ஃபோர்ஸ் 2'. இப்படத்தின் படப்பிடிப்பின்போது தனது முழங்காலில் ஏற்பட்ட பலத்த காயத்தால்,  அறுவை சிகிச்சை செய்து வலது காலை அகற்ற டாக்டர்கள் முடிவு செய்ததாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் நடிகர் ஜான் ஆபிரகாம்.  

இதுபற்றி நடிகர் ஜான் ஆபிரகாம் கூறுகையில், “சில சண்டைக்காட்சிகள் மிகவும் ஆபத்தானவை. அப்படித்தான் 'ஃபோர்ஸ் 2' சூட்டிங்கின்போது எனது முழங்காலில் பலத்த அடிபட்டது. காயம் பெரிதாக இருந்தது. இதற்காக மூன்று முறை அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியிருந்தது. எனது வலது காலில் குடலிறக்க பாதிப்பு  இருந்தது. எனவே, டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து, காலை முழுவதுமாக அகற்ற முடிவு செய்தனர். இதை என்னிடம் தெரிவித்தபோது நான் 'முடியவே முடியாது' என்று சொல்லிவிட்டேன்.

பின்னர் மும்பையில் உள்ள ராஜேஷ் மணியார் என்ற அறுவை சிகிச்சை நிபுணர்தான் என் முழங்காலை காப்பாற்றினார். நான் அதிர்ஷ்டசாலி. எனது காலை இழக்கவில்லை. அந்த டாக்டருக்கு நான் மிகவும் நன்றிக் கடன்பட்டுள்ளேன். இது சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. இன்று நான் நலமாக இருக்கிறேன்; நன்றாக நடக்கிறேன்; உட்காருகிறேன்; எழுந்திருக்கிறேன்; அன்று இருந்ததை விட இன்று வேகமாகவும் வசதியாகவும் இருக்கிறேன். நான் தொடர்ந்து ஆக்ஷன் செய்ய விரும்புகிறேன்'' என்று கூறினார்.

இதையும் படிக்க: விஜய் தேவரகொண்டா - மைக் டைசன் நடிப்பில் உருவாகிவரும் ‘லிகர்’ - வெளியீட்டு தேதி அறிவிப்பு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/LEWxUi8

Post a Comment

0 Comments