பெரிய படங்களை தவிர சின்ன படங்களுக்கு மக்கள் வரமுடியாத சூழல் உள்ளது, கொரோனாவுக்கு பிறகு சின்ன படங்களுக்கு மக்கள் வர தயங்குகிறார்கள் என்று டாணாக்காரன் பட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கூறியுள்ளார்
விக்ரம் பிரபு நடிப்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் அறிமுக இயக்குனர் தமிழ் இயக்கியுள்ள டாணாக்காரன் திரைப்படம் வரும் 8ஆம் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது.
இந்நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய இயக்குனர் தமிழ் , டாணாக்காரன் படத்தில் காவலர்களின் பயிற்சி முகாமில் நடைபெறக்கூடிய உண்மை சம்பவங்களை படமாக்கி இருப்பதாக கூறினர். குறிப்பாக, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடந்த நிகழ்வுகளை ஆய்வு செய்து படமாக்கியிருப்பதாக தமிழ் தெரிவித்தார். அத்துடன் காவலர்கள் மீதான மக்கள் பார்வையை மாற்ற இந்த படம் ஒரு தொடக்கமாகவும், விவாதத்தை தொடங்கி வைக்கும் படமாகவும் இருக்கும் என கூறினார்.
தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, இந்தப் படத்தை மொழிகளை கடந்து அனைத்து மாநில மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என நினைத்தோம். அத்துடன் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு, பெரிய படங்களுக்கு மட்டும் செல்ல மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர், சிறிய படங்களுக்கு வருவதை தவிர்க்கின்றனர், இது கடந்த ஆறுமாதமாக நிகழ்கிறது. இதன் காரணமாகவே டாணாக்காரன் படத்தை ஓ.டி.டி மூலம் மக்களை கொண்டு சேர்க்க வேண்டும் என நினைத்தோம் என கூறினார். அதேபோல் இந்தப் படம் காவலர்கள் மீது பரிதாபம் கலந்த மரியாதையை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/IvA7Uib
0 Comments