இந்தியாவின் முன்னணி மல்டிபிளக்ஸ் நிறுவனங்களான பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் நிறுவனங்கள் இணைக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்தியாவின் முன்னணி மல்டிபிளக்ச் நிறுவனங்களான பிவிஆர் லிமிலெட் மற்றும் ஐநாக்ஸ் லிமிடெட் நிறுவனங்களின் இயக்குநர்கள் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் ஆகிய இரு நிறுவனங்களையும் இணைக்க இயக்குநர்கள் குழு முடிவு செய்துள்ளது. இந்த ஒருங்கிணைந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக அஜய் பிஜிலியும், செயல் இயக்குநராக சஞ்சீவ் குமாரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தங்களிடம் ஏற்கனவே உள்ள பிராண்டிங்குடன் பிவிஆர் ஐநாக்ஸ் லிமிட்டெட் என பெயரிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிவிஆர் நிறுவனம் நாடு முழுவதும் 73 நகரங்களில் 181 சொத்துக்களை 871 திரையரங்குகளை நடத்தி வருகிறது. ஐநாக்ஸ் நிறுவனம் நாடு முழுவதும் 72 நகரங்களில் 160 சொத்துக்களில் 675 திரைகளை நடத்தி வருகிறது. இந்த இணைப்பின் மூலம் உருவாகும் புதிய நிறுவனம் நாடு முழுவதும் மொத்தமாக 109 நகரங்களில் திரையரங்குகளை நடத்த உள்ளது. மொத்தமாக 341 சொத்துக்களில் 1,546 திரையரங்குகளை இயக்க உள்ளது ஒருங்கிணைந்த நிறுவனம். இதன்மூலம் நாட்டில் அதிக திரைகளை இயக்கும் மிகப்பெரிய திரைப்பட காட்சி நிறுவனமாக புதிய நிறுவனம் உருவெடுக்கும்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/SPl9eEi
0 Comments