Ad Code

Responsive Advertisement

துப்பாக்கியுடன் சிம்பு: ’வெந்து தணிந்தது காடு’ இறுதிக்கட்டப் படப்பிடிப்புத் துவக்கம்

சிம்பு - கெளதம் மேனன் கூட்டணியில் உருவாகும் 'வெந்து தணிந்தது காடு' இறுதிக்கட்டப் படப்பிடிப்புத் துவங்கியுள்ளது.

'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' படங்களுக்குப் பிறகு சிம்பு - கெளதம் மேனன் கூட்டணி 'வெந்து தணிந்தது காடு' படத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். சிம்புவின் 47-வது படமான இத்திரைப்படம், எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதையில் உருவாகி வருகிறது.

இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தாமரை பாடல்கள் எழுதுகிறார். ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு திருச்செந்தூரில் தொடங்கியது. சமீபத்தில், மும்பையிலும் படப்பிடிப்புத் துவங்கியது. இப்படத்திற்காக உடல் எடை மெலிந்து கவனம் ஈர்க்கிறார் சிம்பு. ஆக்‌ஷன் - கிராமத்து பின்னணியில் இப்படம் உருவாகி வருகிறது.

image

இந்த நிலையில், 'வெந்து தணிந்தது காடு' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மும்பையிலும் சென்னையிலும் நடைபெறவுள்ளது. நடிகர் சிம்பு கையில் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அப்டேட் கொடுத்திருக்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3IugpXM

Post a Comment

0 Comments