Ad Code

Responsive Advertisement

தமிழில் வெளியானது ‘ஸ்க்விட் கேம்’ வெப் சீரிஸ்

உலகம் முழுக்க ஓடிடி தளத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட ‘ஸ்க்விட் கேம்’ வெப் சீரிஸ் தற்போது தமிழிலும் தெலுங்கிலும் வெளியாகியுள்ளது.

கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி இயக்குநர் ஹ்வாங் டாங்-ஹியூக் இயக்கத்தில் நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது தென்கொரிய படைப்பான ‘ஸ்க்விட் கேம்’. விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸ் வெளியான சில தினங்களிலேயே சர்வதேச அளவில் வரவேற்பைப் பெற்றது. யூகிக்கவே முடியாத க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டால் ‘ட்விட்ஸ்ட் கேம்’ தொடர் என்று சொல்லும் அளவுக்கு பார்வையாளர்களிடம் ஆச்சர்யமூட்டியது.

image

இந்தத் தொடரை தற்போது வரை 13 கோடிக்கும் அதிமானவர்கள் பார்த்துள்ளனர் என நெட்பிளிக்ஸ் அறிவித்துள்ளது. இந்த நிலையில், ஆங்கிலத்தில் ஒளிபரப்பாகிவந்த இந்தத் தொடர் தற்போது தமிழ், மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகியுள்ளது. இதனை, நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3lFu3h7

Post a Comment

0 Comments