Ad Code

Responsive Advertisement

நடிகை ப்ரீத்தி ஜிந்தாவுக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகள்

நடிகை ப்ரீத்தி ஜிந்தாவுக்கு வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன

1988ம் ஆண்டு வெளியான 'தில் சே' படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானவர் ப்ரீத்தி ஜிந்தா. ஃபிலிம்ஃபேர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற இவர், கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த தன் நீண்ட கால நண்பரான ஜீன் குட் இனாஃப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டவர், சிறப்புத் தோற்றங்களில் மட்டும் நடித்தார். இந்நிலையில் தற்போது அவருக்கு வாடகைத்தாய் மூலமாக குழந்தை பிறந்துள்ளது.

Preity Zinta, Gene Goodenough welcome twins Jai and Gia, thank surrogate for being 'part of this incredible journey' | Bollywood - Hindustan Times

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''அனைவருக்கும் வணக்கம், இன்று உங்கள் அனைவருடனும் அற்புதமான செய்தியைப் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். ஜெய் ஜிந்தா குட் எனாஃப் மற்றும் கியா ஜிந்தா குட் எனாஃப் ஆகியோரை எங்கள் குடும்பத்திற்கு வரவேற்பதில் ஜீனும் நானும் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் எங்கள் வாடகை தாயிற்கு மனமார்ந்த நன்றி'' என்று தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3x4KyYB

Post a Comment

0 Comments