
இயக்குநர் வசந்த்தின் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ நேரடியாக ஓடிடியில் வெளியாகவிருக்கிறது.
இயக்குநர் வசந்த்தின் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்தில் நடிகை பார்வதி, லட்சும் பிரியா, கருணாகரன் உள்ளிட்ட நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர். எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன், ஜெயமோகன் உள்ளிட்டவர்களின் சிறுகதைகளைக்கொண்டு இத்திரைபடத்தை எடுத்துள்ளார் இயக்குநர் வசந்த். இப்படத்திற்கு, இளையராஜா இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே, இப்படம் கேரள சர்வதேச திரைப்பட விழா, பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா, புனே சர்வதேச திரைப்பட விழா மட்டுமல்லாமல் ஜப்பான், ஸ்வீடன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் திரைபப்ட விழாக்களிலும் போட்டியிட்டு பல்வேறு விருதுகளையும் சிறந்தப் படமாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், படம் நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் வரும் 26 ஆம் தேதி வெளியாகிறது என்று படக்குழு தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3kTtlfW



0 Comments