
சிவகார்த்திகேயனின் ‘டான்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டாக்டர்’ திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகி வசூலைக் குவித்துக் கொண்டிருக்கிறது. நெட்ஃப்ளிக்ஸ் டாப் 10 படங்களிலும் ட்ரெண்டிங்கில் உலகளவில் உள்ளது. அடுத்ததாக அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் ’டான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரிக்கிறார்.

‘டாக்டர்’ படத்தில் நடித்த பிரியங்கா அருள் மோகன் மீண்டும் இப்படத்தில் ஹீரோயினாக இணைந்திருக்கிறார். இவர்களுடன் ‘குக் வித் கோமாளி’ சிவாங்கி, எஸ்.ஜே சூர்யா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். படம் வரும் ஜனவரியில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், ’டான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. கல்லுரி மாணவராய் சிவகார்த்திகேயன் இன்னும் இளமையுடன் கவனம் ஈர்க்கிறார். சிவாங்கி, பால சரவணன் உள்ளிட்டோர் சிவகார்த்திகேயனின் கல்லூரி தோழர்களாய் ஃபர்ஸ்ட் லுக்கில் இடம்பிடித்திருக்கிறார்கள். மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது போல் போஸ்டர் உள்ளது. சிவாங்கி கைகளில் இருக்கும் கருவியை பார்த்தால் பொறியியல் மாணவர்கள் வைத்திருப்பதை போல் உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3n1cuZZ



0 Comments