
கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் கிளிம்ப்ஸ் நாளை வெளியாகும் என்றும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகிறது என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
நவம்பர் 7-ஆம் தேதி நடிகர் கமல்ஹாசன் தனது 67-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக ‘விக்ரம்’ படக்குழு முன்னோட்ட வீடியோ எனப்படும் கிளிம்ப்ஸ் நாளை வெளியாகிறது என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
கடந்த வருட பிறந்தநாளின்போது கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் இணையும் ‘விக்ரம்’ படத்தின் அறிவிப்பு வெளியானது. தற்போது, கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கடந்த ஜூலை மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.சமீபத்தில் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு தாம்பரம் அருகேயுள்ள சாய்ராம் கல்லூரியில் நடைபெற்று நிறைவடைந்தது. இந்த நிலையில், நாளை ‘விக்ரம்’ படத்தின் கிளிம்ப்ஸ் மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். அதோடு, படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் தியேட்டர்களில் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளார். இதனால், கமல்ஹாசன் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3o0ZKll



0 Comments