Ad Code

Responsive Advertisement

சூர்யா நடிக்கும் 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு

சூர்யா நடிக்கும் 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்..

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் படம் 'எதற்கும் துணிந்தவன்'. இயக்குநர் பாண்டியராஜ் இயக்கும் இந்த படத்தில் நாயகியாக ப்ரியங்கா மோகன் நடித்துள்ளார். தவிர, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்துக்கு இமான் இசைமயமைத்துள்ளார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

ரத்தம் சொட்ட சொட்ட கையில் வாளுடன் மாஸாக நிற்கும் சூர்யா! 'எதற்கும் துணிந்தவன்' ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! | etharkkum thinindhavan suriya movie first look released

இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் காரைக்குடியில் 51 நாட்கள் தொடர் படப்பிடிப்பு நடைபெற்றது. அது முடிந்ததும் சென்னையில் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துவிட்டது என பாண்டிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட பணிகள் முடிந்து, பொங்கலுக்கு படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3qwMvvs

Post a Comment

0 Comments