
ஸ்குவிட் கேம் சீசன் 2 விரைவில் வெளியாகும் என அந்த வெப்சீரிஸின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
நெட்ஃபிக்ஸ் தொடரான ஸ்க்விட் கேம் வெளியான சில நாட்களிலேயே மிகவும் பிரபலமடைந்தது. இதன் அடுத்த சீசன் எப்போது வரும் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த வெப்சீரிஸின் இயக்குநர் ஹ்வாங் டோங்-ஹ்யுக் சீசன் 2 வருவது உறுதி என தெரிவித்துள்ளார்.

சீசன் 2க்கான கதைக்களம் இன்னும் எழுத்து வடிவத்தை பெறவில்லை என்றும், அது குறித்து திட்டமிட்டு வருவதாகவும் கூறியுள்ளார். விரைவில் இதற்கான அடுத்தகட்ட பணிகள் தொடங்கும் எனவும், புதிய சீசனில் Gi-hun மீண்டும் வருவார் என்றும் இதில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் இடம்பெறும் என அவர் கூறியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/31CZ5yY



0 Comments