Ad Code

Responsive Advertisement

ஓடிடி-யில் விரைவில் வெளியாகிறது தெலுங்கு ‘திருஷ்யம் 2’: ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் வெங்கடேஷன் நடிப்பில் உருவாகும் 'திருஷ்யம் 2' படத்தின் தெலுங்கு வெர்ஷன், அமேசான் ஓடிடி பிரைமில் நவம்பர் 25-ம் தேதி வெளிவர இருக்கிறது.

கடந்த மார்ச் மாதம் தொடங்கிய இதன் படப்பிடிப்பு, டப்பிங் அனைத்தும் முடிவடைந்த நிலையில், அதன் ரிலீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இத்திரைப்படம் அமேசான் ஓடிடி பிரைமில் நவம்பர் 25 ம் தேதி வெளிவர இருக்கிறது. முன்னதாக திருஷ்யம் முதல் பாகமும் தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் 2014-ம் ஆண்டு வெளியாகியிருந்தது.

படத்தில் வெங்கடேஷூடன் அவர் மனைவி கதாபாத்திரத்தில் மீனா, காவல்துறை அதிகாரியாக நதியா, மகள்களாக கிருத்திகா ஜெயக்குமார், எஸ்தெர் ஆகியோர் நடித்திருந்தனர். அப்படத்தை நடிகை ஸ்ரீப்ரியா இயக்கியிருந்தார். கதை, திரைக்கதை ஆகியவற்றை ஜீத்து ஜோசஃப் செய்திருந்தார்.

image

தொடர்புடைய செய்தி: மலையாள வெற்றியை அடுத்து தெலுங்கில் ரீமேக் ஆகிறது "திருஷ்யம் 2"

தற்போது இரண்டாம் பாகத்தை ஜீத்து ஜோசஃபே எழுதி இயக்கவும் செய்யதுள்ளார். முதல் பாகத்தில் இருந்த அதே நடிகர்களை வைத்தே இரண்டாம் பாகமும் தயாராகியுள்ளது. இவர்களுடன் நடிகர் சம்பத், பூர்ணா ஆகியோர் புதிதாக இப்பாகத்தில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திரைப்படம் நவம்பர் 25ல் அமேசான் பிரைமில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

வெங்கடேஷின் முந்தைய படமான நாரப்பா (’அசுரன்’ தமிழ் படத்தின் ரீமேக்) திரைப்படமும் ஓடிடியில் தான் வெளியாகியிருந்தது. தற்போது இப்படம் தியேட்டரில் ரிலீஸாகும் என எதிர்ப்பார்த்திருந்த ரசிகர்களுக்கு, இந்த அறிவிப்பு சற்று ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3kwOGLN

Post a Comment

0 Comments