Ad Code

Responsive Advertisement

இரண்டே நாளில் ரூ.100 கோடி வசூலைக் கடந்த ‘அண்ணாத்த’

வெளியான இரண்டே நாளில் 100 கோடி வசூல் செய்த ‘அண்ணாத்த’

ரஜினியின் ’அண்ணாத்த’வெளியான இரண்டே நாளில் 100 கோடி வசூல் செய்துள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் ’அண்ணாத்த’ தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வந்தது. 'தர்பார்' படத்திற்கு பிறகு நடிகர் ரஜினி ’சிறுத்தை’ சிவா இயக்கத்தில் 'அண்ணாத்த' படத்தில் நடித்துள்ளார். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.தீபாவளியை முன்னிட்டு படம் கடந்த 4 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது. அண்ணன் தங்கை பாசக்கதைக்களத்தைக் கொண்ட ‘அண்ணாத்த’ சூப்பர்... சுமார் என்று கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.

image

இந்த நிலையில், படம் உலகம் முழுக்க 100 கோடி ரூபாய்க்குமேல் வசூல் செய்துள்ளது. உலகம் முழுக்க வெளியான முதல் நாளில் 70 கோடி ரூபாயும், இரண்டாம் நாளில் 42 கோடி ரூபாய்யும் வசூல் செய்துள்ளது. மொத்தம் இதுவரை 112 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3bO3NM4

Post a Comment

0 Comments