Ad Code

Responsive Advertisement

கடத்தலில் தொடங்கி, பி.சி.ஆர் சட்டத்திற்கு சென்று, மதமாற்றத்தில் முடியும் ‘ருத்ர தாண்டவம்’

மோகன்.G இயக்கத்தில் வெளிவந்துள்ள ருத்ர தாண்டவம் திரைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

பி.சி.ஆர் சட்டத்தால் தவறாக பாதிக்கப்பட்ட காவல் ஆய்வாளர் உண்மையை நிரூபித்தாரா? இல்லையா? என்பதே ருத்ர தாண்டவம். போதைப்பொருள் கடத்தலில் தொடங்கி, பி.சி.ஆர் சட்டத்திற்கு சென்று, மதமாற்றத்தில் முடிவடைகிறது.

திரௌபதி படத்தில் நாடக காதல் என்பதை படமாக்கிய மோகன் ஜி, இந்த திரைப்படத்தில் சாதி, மத பிரிவினையை அரசியல் சுயலாபத்திற்காக கட்சியினர் செய்கின்றனர் என்று கூறியுள்ளார். மேலும் அடுத்த தலைமுறை இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். அதை பெற்றோர்கள் கவனமாக கையாள வேண்டும் எனவும் கதையில் கூறியுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல், அரசியல் நகர்வுகள் உள்ளிட்டவற்றின் தலைவனாக வரும் கவுதம் வாசுதேவ் மேனனுக்கும், அதைத் தடுக்க நினைக்கும் காவல் ஆய்வாளர் ரிச்சார்டுக்குமான மோதல் திரைக்கதையாக நகர்கிறது.

image

ஆனால் இதில் இடம்பெறும் மதமாற்றம் குறித்த காட்சிகளும் கிரிப்டோ கிறிஸ்டின் வசனங்களும் சர்ச்சையாகும் என கூறப்படுகிறது. இங்கு Cypto Christian ஏராளமான முறைகேடுகள் நடக்கின்றன. அதற்காக வெளி நாடுகளில் இருந்து பணம் வருகின்றன என காட்சிகளையும், வசனங்களையும் இணைத்துள்ளார் மோகன் ஜி.

ருத்ர தாண்டவம் படத்தில் தான் சொல்லவந்ததை நீண்ட நெடிய திரைக்கதையில் கூறியுள்ளார். ஆனால், சாதி, மதம் என மக்களிடம் பிரச்னை இல்லை. அதை அரசியலாக்கும் இடத்தில்தான் பிரச்னை என காட்ட முயற்சித்திருக்கிறார் இயக்குனர். ஆனால் அவரின் கருத்து அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பது கேள்விகுறி.

இந்தப் படத்தில் பல விஷயங்களையும், தன்னுடைய கருத்துகளையும் இயக்குனர் சேர்த்திருப்பதால் படம் நீண்டுகொண்டே செல்கிறது. நாடக தன்மையை கொடுப்பதால் பல காட்சிகளின் நேரத்தை குறைத்திருக்கலாம். இதில் இயக்குனர் தன்னுடைய கருத்தை கூறியிருந்தாலும், சிறுபான்மையினரிடம் கொதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

- செந்தில் ராஜா

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2YebfNv

Post a Comment

0 Comments