
’வாகா’ எல்லையில் அஜித் இருக்கும் புதிய புகைப்படங்களை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ளார்.
’நேர்கொண்ட பார்வை’ வெற்றிக்குப் பிறகு மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹீமா குரேஷியும், வில்லனாக கார்த்திகேயாவும் நடிக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ’வலிமை’ பொங்கலையொட்டி வெளியாகிறது என்று சமீபத்தில் அறிவித்தார்.

’வலிமை’ படப்பிடிப்பு முடிந்ததால் அஜித் சமீபத்தில் டெல்லி உள்ளிட வட மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்த நிலையில், பாகிஸ்தானையும் இந்தியாவையும் இணைக்கும் ‘வாகா’ எல்லையில் அஜித் ராணுவ வீரர்களுடன் உற்சாகமுடன் உரையாடியுள்ளார்.

அஜித் பைக்கில் இருக்கும் புகைப்படம், ராணுவ வீரர்களுடன் உரையாடுவது, செம்ம ஹேண்ட்சம் லுக்கில் அமர்ந்திருக்கும் புகைப்படம் போன்றவற்றை தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக, ராணுவ வீரர்கள் அஜித்துடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட புகைப்படம் கவனம் ஈர்த்துள்ளது. இந்தப் புகைப்படத்தை பகிர்ந்து அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3jO89rh



0 Comments