Ad Code

Responsive Advertisement

’பீஸ்ட்’ அப்டேட்: பிறந்தநாளில் வெளியாகும் பூஜா ஹெக்டேவின் கேரக்டர் போஸ்டர்

’பீஸ்ட்’ படத்தில் நாயகியாக நடிக்கும் பூஜா ஹெக்டேவின் கேரக்டர் போஸ்டர், அவர் பிறந்தநாளையொட்டி வெளியிட திட்டமிட்டிருக்கிறது படக்குழு.

’மாஸ்டர்’ வெற்றிக்குப்பிறகு நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் ‘பீஸ்ட்’ படத்தில் நடிக்கிறார். பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் 'பீஸ்ட்' படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைகிறார். இந்தப் படத்தின் 6 ஆம் கட்டப் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நிறைவடைந்தது. விஜய் பிறந்தநாள் அன்று பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதோடு இதுவரை எந்த அப்டேட்டும் படக்குழு கொடுக்கவில்லை.

image

இதனால், ‘பீஸ்ட்’ அப்டேட் கேட்டு ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் விஜய் ரசிகர்கள். இந்த நிலையில், பூஜா ஹெக்டேவின் பிறந்தநாள் வரும் அக்டோபர் 13 ஆம் தேதி வருவதையொட்டி படக்குழு பூஜா ஹெக்டேவின் கேடக்டர் போஸ்டரை வெளியிட திட்டமிட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3mxt4iJ

Post a Comment

0 Comments