Ad Code

Responsive Advertisement

புனேவில் இன்று துவங்கிய ஷங்கர் - ராம் சரண் படப்பிடிப்பு

இயக்குநர் ஷங்கர் - ராம் சரண் இணையும் ‘ராம் சரண் 15’ படத்தின் படப்பிடிப்பு இன்று புனேவில் தொடங்கியிருக்கிறது.

இயக்குநர் ஷங்கர் ‘ராம் சரண் 15’ படத்தை இயக்கவிருக்கிறார். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். ஜானி மாஸ்டர் கொரியோகிராஃபி செய்கிறார். தமன் இசையமைக்கிறார். ராம் சரண் இரட்டை கதாப்பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்திற்கு நாயகியாக கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

image

கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி நடந்த இப்படத்தின் பூஜையில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், இயக்குநர் ராஜமெளலி, சு.வெங்கடேசன் எம்.பி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். 170 கோடியில் இப்படம் உருவாகும். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் தொடங்கியிருக்கிறது. இதனால், #RC15 என்ற ஹேஷ்டேக் தற்போது டிவிட்டரில் ட்ரெண்டிங் ஆகிவருகிறது. அட்லீ - ஷாருக்கான் இணையும் படத்தின் படப்பிடிப்பும் புனேயின் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3johJAA

Post a Comment

0 Comments