Ad Code

Responsive Advertisement

நவம்பரில் நிறைவடையும் 'பீஸ்ட்' படப்பிடிப்பு?

விஜய் நடிக்கும் ’பீஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் நிறைவடைகிறது.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் 'பீஸ்ட்' படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களாக சென்னையில் நடைபெற்று வருகிறது. மேலும், இம்மாத துவக்கத்தில் நான்காம் கட்டப் படப்பிடிப்பை சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் அமைக்கப்பட்ட அரங்கில் நடத்தினர் படக்குழுவினர். இதை முடித்துக்கொண்டு வரும் வாரத்தில் வாரத்தில் டெல்லி செல்கின்றனர். அங்கு 5 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறுகிறது. அதை முடித்துக்கொண்டு சென்னை திரும்புகின்றனர். அதன்பிறகு, நவம்பர் இறுதியில் 'பீஸ்ட்' மொத்த படப்பிடிப்பையும் முடிக்கத் திட்டமிட்டுள்ளனர். '

'பீஸ்ட்' படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது என்பதால் படத்தின் புரமொஷன் பணிகளை 'அண்ணாத்த' படம் வெளியான பிறகே தொடங்கவுள்ளனர். பீஸ்ட்' பொங்கலையொட்டி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/394ofa9

Post a Comment

0 Comments