Ad Code

Responsive Advertisement

”அஜித் சார் உண்மையிலேயே அற்புதமான மனிதர்; அவர் ஹாய் சொன்ன தருணம்...”: நடிகர் நவ்தீப்

நடிகர் நவ்தீப் அஜித்துடன் எடுத்துக்கொண்டப் புகைப்படங்கள் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் உள்ளதோடு வைரலாகி வருகின்றன.

கடந்த 2008 ஆம் ஆண்டு இயக்குநர் ராஜுசுந்தரத்தின் இயக்கத்தில் அஜித்தின் ’ஏகன்’வெளியானது. அப்படத்தில் அஜித்துடன் கல்லூரி மாணவராக நடிப்பில் கவனம் ஈர்த்தார் நவ்தீப். இந்த நிலையில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் அஜித்துடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ’நேர்கொண்ட பார்வை’ வெற்றிக்குப்பிறகு எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். யுவன் இசையமைக்க பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி ஹீரோயினாக நடிக்கிறார்.

image

கொரோனா ஊரடங்கால், இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு முடியாத நிலையில் தள்ளிப்போனது. தற்போது படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளித்துள்ளதால், சமீபத்தில் முக்கியமான இணைப்புக் காட்சிகளை ஹைதராபாத்தில் எடுத்து முடித்தது படக்குழு. படத்தின் முக்கியமான சண்டைக் காட்சி மட்டும் எடுக்கப்படாமல் இருந்து வந்த நிலையில், அதற்காக அஜித் உள்ளிட்ட 'வலிமை' படக்குழுவினர் ரஷ்யா சென்று படப்பிடிப்பை முடித்தனர். 

image

இந்த நிலையில், சமீபத்தில் அஜித் ஹைதராபாத்தில் பைக் ரேஸ் நிகழ்வில் கலந்துகொண்டார். அதில், நடிகர் நவ்தீப்பும் கலந்துகொண்டார். அவர், அஜித்துடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு “அஜித் சார் ஹாய் சொன்ன தொனியைப் பார்த்து நான் வியந்துபோனேன். அந்த ஹாய் அவரைப் பலமுறை சந்தித்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.

image

அவரது எளிமையையும் நுண்னறிவுள்ள குணத்தையும் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அஜித் சார் உண்மையிலேயே அற்புதமான மனிதர்” என்று உற்சாகமுடன் பதிவிட்டுள்ளார்.

image

அஜித் நவ்தீப்புடனும் மற்ற பைக் ரேஸ் வீரர்களோடும் இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3C7cEUs

Post a Comment

0 Comments