Ad Code

Responsive Advertisement

’தலைவி’ அரசியல் திரைப்படம் கிடையாது - இயக்குநர் ஏ.எல் விஜய்

’தலைவி’ அரசியல் திரைப்படம் கிடையாது என்று இயக்குநர் விஜய் கூறியுள்ளார். இது முழுக்க முழுக்க ஜெயலலிதாவின் பயணம் குறித்த திரைப்படம் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டிருக்கும் தலைவி திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நாயகி கங்கனா ரணாவத், அரவிந்த்சாமி, மதுபாலா, தம்பி ராமையா மற்றும் இயக்குநர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.  அதில் பேசிய இயக்குநர் விஜய்,  தலைவி அரசியல் திரைப்படம் அல்ல, ஜெயலலிதாவின் பயணம் குறித்த படம் எனக் கூறினார். அதேபோல் தலைவி திரைப்படத்தை பல ஓ.டி.டி நிறுவனங்கள் நேரடியாக வெளியிட முன்வந்தன. ஆனால் திரையரங்கில்தான் படத்தை வெளியிடுவோம் என காத்திருந்ததாக தயாரிப்பாளர் விஷ்ணுவர்த்தன் இந்தூரி தெரிவித்தார்.

image

மேலும் இந்த திரைப்படம் தன்னுடைய திரைப்பயணத்தில் மிக முக்கியப்படமாக இருக்கும் என்று அரவிந்த்சாமியும்,  நடிகை கங்கனா ரணாவத்தும்  தெரிவித்தனர். ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த திரைப்படம்  வரும் 10-ஆம் தேதி தியேட்டரில் வெளியாகிறது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3h2MIku

Post a Comment

0 Comments