Ad Code

Responsive Advertisement

தெலுங்கு ’பிக்பாஸ் சீசன் 5’: நாகர்ஜுனாவுக்கு சம்பளம் ரூ.12 கோடி?

தெலுங்கு ’பிக்பாஸ்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகர்ஜுனாவுக்கு 12 கோடி ரூபாய் சம்பளம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் என்று வெளியான எல்லா மொழிகளிலும் சூப்பர் ஹிட் அடித்த நிகழ்ச்சி என்றால், அது ‘பிக்பாஸ்’ தான். தமிழில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். அதேபோல, தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார். தமிழைப் போலவை தெலுங்கிலும் 4 சீசன்களைக் கடந்து தற்போது ‘பிக்பாஸ் 5’ வது சீசன் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில், நடிகர் நாகர்ஜுனாவுக்கு ’பிக்பாஸ் சீசன் 5’ விற்கான சம்பளம் 12 கோடி ரூபாய் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், ’பிக்பாஸ் சீசன் 4’ சம்பளம் 8 கோடி ரூபாய் என்றும் தற்போது அது உயர்த்தப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியை இந்தியில் சல்மான்கானும், மலையாளத்தில் மோகன்லாலும் தொகுத்து வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3zWsCju

Post a Comment

0 Comments