
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் தலைப்பு வெளியாகி இருக்கிறது.
கார்த்திக் நரேனின் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ், மித்ரன் ஜவகர் இயக்கத்தில் ‘தனுஷ் 44’ படத்தில் நடிக்கிறார். தனுஷுடன் ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரங்களில் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின், படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. தனுஷ், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், நடிகை நித்யா மேனன் உள்ளிட்டோர் பூஜையில் கலந்துகொண்டார்கள். இந்த நிலையில், தற்போது படத்தின் தலைப்பை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. ‘திருச்சிற்றம்பலம்’ என்று தலைப்பிட்டுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3ChlBLN



0 Comments