
அஜித்தின் ’வலிமை’ பட ‘நாங்க வேற மாரி’ பாடல் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு முடியாத நிலையில் தள்ளிப்போனது.

தற்போது படப்பிடிப்புகள் நடத்த அனுமதி அளித்துள்ளதால், ஹைதராபாத்தில் இணைப்புக் காட்சிகளை எடுத்து முடித்துள்ள படக்குழு முக்கியமான சண்டைக் காட்சிகளுக்காக தற்போது வெளிநாடு சென்றுள்ளது.

இந்த நிலையில், கடந்த 2 ஆம் தேதி ‘வலிமை’ படத்தின் ’நாங்க வேற மாரி’ பாடல் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. வெளியான ஒரே நாளில் 1 மில்லியன் லைக்ஸ்களுக்கு மேல் குவித்துள்ளதோடு யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்தது. இதுவரை 10 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

இந்த நிலையில், ’வலிமை’படத்தின் ‘நாங்க வேற மாரி’ பாடல் புகைப்படங்களை அதிகாரபூர்வமாக படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.





Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3s3lwGU



0 Comments