Ad Code

Responsive Advertisement

விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் மிரட்ட வரும் செல்வராகவன்: அதிகாரபூர்வ அறிவிப்பு

விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் இயக்குநர் செல்வராகவன் இணைந்திருக்கிறார்.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் தொடங்கியது. அதனையடுத்து, சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் அரங்கம் அமைத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நடத்தினர். இந்த நிலையில், தற்போது சென்னை ஈ.சி.ஆர் பகுதியில் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

image

விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.  இந்த நிலையில், இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் இப்படத்தில் இணைந்திருக்கிறார். இதனால், படத்திற்கு மேலும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. படத்தில் விஜய்க்கு மூன்று வில்லன்கள் என்று சொல்லப்படுகிறது. அதில், செல்வராகவனும் ஒருவர் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3itXWjn

Post a Comment

0 Comments