Ad Code

Responsive Advertisement

வாங்க வாத்தியாரே: ’சார்பட்டா’ துரைக்கண்ணு வாத்தியாரை சைக்கிளில் ஏற்றிய டான்சிங் ரோஸ்

’சார்பட்டா பரம்பரை’ படத்தின் எதிரணியைச் சேர்ந்த துரைக்கண்ணு வாத்தியாராக நடித்த நடிகர் ஜி.எம் சுந்தரை ‘டான்சிங் ரோஸ்’ ஷபீர், ’வேம்புலி’ ஜான் கொக்கன் சைக்கிளில் வைத்து ஓட்டிச் செல்லும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

சமீபத்தில் அமேசான் ஓடிடி தளத்தில் இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘சார்பட்டா பரம்பரை’ வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில், சார்பட்டா பாக்ஸிங் பரம்பரையின் பயிற்சியாளர் ரங்கன் வாத்தியாராக எதார்த்தமான நடிப்பில் கவனம் ஈர்த்து ரசிகர்களின் பாராட்டுகளை குவித்தார் பசுபதி. அதேசமயம், எதிரணியான இடியாப்ப பாக்ஸிங் பரம்பரையின் பயிற்சியாளராக நடிப்பில் டஃப் பைட் கொடுத்திருந்தார் நடிகர் ஜி.எம் சுந்தர்.

image

ரங்கன் வாத்தியாரான பசுபதியை ஆர்யா சைக்கிளில் வைத்து ஓட்டிச் செல்லும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகிக்கொண்டிருக்க, இடியாப்ப பரம்பரையின் ஆக்ரோஷமான குத்துச்சண்டை வீரர்களான டான்ஸிங் ரோஸ் ஷபீர், வேம்புலி ஜான் கொக்கன் ஆகியோர் தங்கள் அணியின் துரைக்கண்ணு வாத்தியார் ஜி.எம் சுந்தரை நிஜத்தில் சைக்கிளில் அமர வைத்து ஓட்டிச் செல்லும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Vaanga Vaathiyaare @GMSundar_ ......naamalum koode ooru sutthi varalaam.

வாங்கோ வாத்தியாரே நாமளும் ஊர சுத்தி வரலாம்!!!@Music_Santhosh @arya_offl @beemji @officialneelam @K9Studioz

Please watch #sarpattaonprime Streaming on @primevideoin pic.twitter.com/Su5YdbQHxG
— Highonkokken (@johnkokken1) August 10, 2021

இந்தப் புகைப்படங்களை இடியாப்ப பரம்பரையின் வேம்புலி ஜான் கொக்கன், டான்சிங் ரோஸ் ஷபீர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றனர்.

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3AxR0bd

Post a Comment

0 Comments