Ad Code

Responsive Advertisement

தெலுங்கு 'ஆந்தாலஜி'யில் சத்யராஜ் - சகோதரியை இயக்குநராக அறிமுகப்படுத்தும் நடிகர் நானி

பிரபல தெலுங்கு நடிகர் நானி தனது சகோதரியை இயக்குநராக அறிமுகப்படுத்தும் 'மீட் கியூட்' படத்தின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

தெலுங்கு திரையுலகின் 'நேச்சுரல் ஸ்டார்' என்று அழைக்கப்படும் நானி தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். 'வால் போஸ்டர் சினிமா' என்ற பெயரில் சினிமா தயாரிப்பு, விநியோகம் உள்ளிட்ட பணிகளை செய்தும் வரும் நானி, இதுவரை மூன்று படங்களை தயாரித்தும் இருக்கிறார். தற்போது தனது நிறுவனம் சார்பில் நான்காவது படமாக 'மீட் கியூட்' என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறார்.

image

சுவாரஸ்யமாக இந்தப் படத்தை எழுதி இயக்குபவர் நானியின் சகோதரி தீப்தி காந்தா. சில நாட்கள் முன்பு இந்தப் படத்தின் ஷூட்டிங்கை நானி தொடங்கி வைத்தார். நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஐந்து கதைகளை எடுத்துக் கூறும் ஆந்தாலஜி படமாக இது உருவாகி வருகிறது. தெலுங்கு சினிமாவில் இதுவரை இல்லாத வகையில் ஆறு ஆண் கதாபாத்திரங்கள் மற்றும் ஏழு பெண் கதாபாத்திரங்கள் இந்தக் கதையில் இருக்கின்றன என்று தகவல் வெளியாகியுள்ளது. பல மொழிகளை சேர்ந்த கலைஞர்கள் இடம்பெறுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

image

முதல்கட்டமாக ரோஹிணி, அதா சர்மா, வர்ஷா பொல்லம்மா, அகங்கா ஷா, ருஹானி சர்மா, சுனைனா, சஞ்சிதா பூனாச்சா ஆகிய நடிகைகளும், சத்யராஜ், அஷ்வின் குமார், சிவ கந்துக்குரி, தீக்‌ஷித் ஷெட்டி, கோவிந்த் பத்மசூர்யா, ராஜா ஆகிய நடிகர்களும் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளனர்.

இவர்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ள புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன. நானி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தப் புகைப்படங்களை பதிவிட்டு, ''ஐந்து கதைகள், ஐந்து சந்திப்புகள், ஓர் அழகான ஆந்தாலஜி விரைவில் வருகிறது" என்று பதிவிட்டு இருக்கிறார்.

image

படத் தயாரிப்பில் தீவிரம் காட்டி வரும் அதேவேளையில் தனது அடுத்த படமான 'டக் ஜெகதீஷ்' வெளியீட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார் நானி. காதல், குடும்பத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், முதலில் ஓடிடி வெளியீடு என்று பேசப்பட்டது. ஆனால் தற்போது தியேட்டர்கள் அங்கு திறக்கப்பட்டுள்ளதால் தியேட்டரில் வெளியிடலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2TZJzKf

Post a Comment

0 Comments