Ad Code

Responsive Advertisement

"மணமகள் யாரென்றே தெரியாமல் ஒரு மாப்பிள்ளை ஊர்வலம்": கவனம் ஈர்க்கும் ’பிஸ்தா’ டீசர்

நடிகர் சிரிஷின் ‘பிஸ்தா’ படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘மெட்ரோ’படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் சிரிஷ் தற்போது ‘பிஸ்தா’ படத்தில் நடித்திருக்கிறார். காதல், நகைச்சுவை, குடும்பக் கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தில், நடிகர் செந்தில், யோகி பாபு,சதீஷ், ஞானசம்மந்தம் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ரமேஷ் பாரதி இயக்கியிருக்கிறார். சிரிஷ் ஜோடியாக மிருதுளா, அருந்ததி நாயர் நடித்திருக்கிறார்கள். ஏற்கனவே, கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், கடந்த 1997 ஆம் ஆண்டு ‘பிஸ்தா’ படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. தற்போது, அதேத் தலைப்பை தனது படத்திற்கு சூட்டியிருக்கிறார், ரமேஷ் பாரதி. இந்த நிலையில், இப்படத்தின் டீசரை இயக்குநர் கே.எஸ் ரவிக்குமாரும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் வெளியிட்டிருக்கிறார்கள்.

டீசரில் ‘மணமகள் யாரென்றே தெரியாமல் ஒரு மாப்பிள்ளை ஊர்வலம்’, ‘, ’என்னடா இது கல்யாண பொண்ணு மூஞ்சில கம்மிங் சூன் போட்டு வச்சிருக்கங்க’, ‘ஃபர்ஸ்ட் லுக், டீசர், டிரெய்லர்னு கல்யாண பொண்ணை பிட்டு பிட்டா இறக்கி விடுறாங்கப் போலருக்கு’, ‘எவ்ளோ நேரம்தான் லத்தியிலேயே அடிப்பீங்க, கொஞ்சம் கைலயும அடியுங்களேன்’,’ அவன் உன்னை ஸ்ட்ரைட்டா கலாய்க்க முடியாம செல்ஃபோன் வச்சி கலாய்க்கிறான்’ உள்ளிட்ட வசனங்கள் கவனம் ஈர்த்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டியிருக்கின்றன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3lPfCIc

Post a Comment

0 Comments